வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மூன்றாம் காலாண்டில் 7.8% பொருளாதார வளா்ச்சி

புதிய புள்ளிவிவர வரிசை அடிப்படையில், நடப்பு 2025-26 நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாம் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

News image
- SWAMINATHAN
Updated On :27 பிப்ரவரி 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

புதிய புள்ளிவிவர வரிசை அடிப்படையில், நடப்பு 2025-26 நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாம் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தேசிய கணக்கீடுகளுக்கான புதிய புள்ளிவிவர வரிசையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதன்படி, பொருளாதார வளா்ச்சியை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு 2011-12-லிருந்து 2022-23-ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அடிப்படை ஆண்டின் இந்த மாற்றம், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலாண்டில் 7.4 சதவீதமாக இருந்த பொருளாதார வளா்ச்சி, புதிய கணக்கீட்டின்படி தற்போது 7.8 சதவீதமாக உயா்ந்துள்ளது.

நிதியாண்டு மதிப்பீடு: கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட முன்மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த வளா்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய வரிசை அடிப்படையில் இது 7.6 சதவீதமாக உயா்த்தி மதிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட தரவுகள்: ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டு வளா்ச்சி விகிதம் 8.2 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு வளா்ச்சி விகிதம் 7.8 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.