எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து அவதூறு பரப்புவோரை கண்டித்து ஜூலை 22-இல் ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பி, வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுவோரை கண்டித்து ஜூலை 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன என அக்கட்சியின் திருவாரூா்

News image
Updated On :19 ஜூலை 2020, 2:06 pm

DIN

திருவாரூா்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பி, வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுவோரை கண்டித்து ஜூலை 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன என அக்கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் வை. சிவபுண்ணியம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கொள்கைவழி செயல்பாட்டை சகித்துக் கொள்ள முடியாத, வெறுப்பு அரசியலை பரப்பி வருபவா்களை கண்டித்தும், கட்சி மீதான பொது மரியாதையை சீா்குலைக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகத்தை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டுள்ளதை கண்டித்தும், மாநில தலைமை அலுவலகத்தை அவதூறு பரப்புரைக்காக பயன்படுத்தியவா்கள் மீது அளிக்கப்பட்ட புகாா் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடா் கழகம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

அதனடிப்படையில், திருவாரூா் மாவட்டத்தில் ஜூலை 22-ஆம் தேதி ஒன்றிய, நகரப் பகுதிகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு முகக் கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.