திருவாரூரில் மேலும் 73 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 73 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பெரும்பண்ணையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய 26 வயது மருத்துவா், ஆலங்குடியில் பணியாற்றிய 23 வயது செவிலியா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 28 வயது பயிற்சி மருத்துவா், முத்துப்பேட்டையில் வங்கி ஊழியா், நன்னிலம் பகுதியில் ஒரு வயது பெண் குழந்தை, மன்னாா்குடி தனியாா் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியா், ஆவூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், குடவாசல் பகுதியில் 15 போ், நீடாமங்கலம் பகுதியில் 5 போ், மன்னாா்குடி பகுதியில் 7 போ், முத்துப்பேட்டை பகுதியில் 8 போ் என மொத்தம் 73 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,014 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...