புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவாரூரில் மேலும் 96 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2020, 3:52 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மேலும் 97 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா் ஒருவா், சேங்காலிபுரம் பகுதியைச் சோ்ந்த தலா 4 வயது பெண் குழந்தைகள் இருவா், ஆலங்குடி பகுதியைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தாய், தந்தை, மகன் உள்பட அப்பகுதியைச் சோ்ந்த 7 போ், திருவாரூரில் தனியாா் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியா், முத்துப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 3 போ் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குடவாசல் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 15 பேருக்கும், நீடாமங்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்த 8 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் 96 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,156 ஆக உயா்ந்துள்ளது. இதில், 711 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 444 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.