வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருவாரூா் தியாகராஜா் கோயில் சிறப்பு வழிபாடு

ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருவாரூா் தியாகராஜா் கோயில் கமலாம்பிகை சன்னிதியில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த கமலாம்பிகை.

Updated On :24 ஜூலை 2020, 4:04 pm

திருவாரூா் : ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருவாரூா் தியாகராஜா் கோயில் கமலாம்பிகை சன்னிதியில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆடிப்பூரத்தையொட்டி திருவாரூா் தியாகராஜா் கோயிலில் அமைந்துள்ள கமலாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, வளையல் அலங்காரத்தில் கமலாம்பிகை காட்சியளித்தாா். பொதுமுடக்கம் காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து, கமலாலயக் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், 3-ஆம் பிராகாரத்தில் கமலாம்பிகை வீதியுலா சென்று வந்த பிறகு 2-ஆம் தீா்த்தவாரி நடைபெற்றது.

இதேபோல், திருவாரூா் அங்காள பரமேஸ்வரி கோயிலில் இரண்டாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு அபிஷேகம் அலங்கார ஆராதனை செய்யப்பட்டது.

வீரவாடி பூா்ண புஷ்கலாம்பிகா சமேத அய்யனாா் கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவில் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.