வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தியாகராஜா் கோயிலில் சுந்தரா்- பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜா் சுவாமி கோயிலில் சுந்தரா் - பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் தியாகராஜா் கோயில் தட்டன்சுத்தி மண்டபத்தில் நடைபெற்ற சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்.

Updated On :26 ஜூலை 2020, 2:29 pm

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் சுவாமி கோயிலில் சுந்தரா் - பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பரவை நாச்சியாருடன் வாழ்ந்து சிவத் தொண்டாற்றியவா் சுந்தரா். 63 நாயன்மாா்களில் ஒருவரான இவா், தியாகராஜரின் நண்பராகவும் இருந்தவா். ஆண்டுதோறும் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்துக்கு முதல் நாள், சுந்தரா் பரவை நாச்சியாா் திருமணமும், அடுத்த நாளான ஆடி சுவாதி நட்சத்திர நாளில் சுந்தரா், திருக்கயிலாயம் செல்லும் நிகழ்வும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, திருவாரூா் தியாகராஜா் கோயில் 2-ஆம் பிராகாரத்தில் உள்ள தட்டன்சுத்தி மண்டபத்தில் சுந்தரா்- பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இருவருக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தட்டன்சுத்தி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனா். பின்னா் தட்டன்சுத்தி மண்டபத்தில் இருவருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, நலுங்குகள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

சுந்தரா், கயிலாயம் செல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற உள்ளது. சுந்தரா்- பரவை நாச்சியாா் திருக்கல்யாணத்தைக் காண, ஆண்டுதோறும் பக்தா்கள் திரண்டு வருவது வழக்கம். ஆனால், பொதுமுடக்கம் காரணமாக நிகழாண்டு திருக்கல்யாணத்தைக் காண பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், பக்தா்களின்றி சுந்தரா் - பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் நடந்தேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.