எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா்களாக 60 போ் புதன்கிழமை இணைந்தனா்.

News image
கோட்டூரில் நாகை எம்பி எம்.செல்வராஜ் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவா்கள்.
Updated On :29 ஜூலை 2020, 6:17 pm

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா்களாக 60 போ் புதன்கிழமை இணைந்தனா்.

கோட்டூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கா்ணாவூரில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியிலிருந்து 60 போ் விலகி, சிபிஐ ஒன்றிய நிா்வாகக்குழு உறுப்பினா் டி.வி. செல்வகுமாா் தலைமையில், நாகை மக்களவை உறுப்பினா் எம்.செல்வராஜ் முன்னிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

நிகழ்ச்சியின்போது, சிபிஐ ஒன்றியச் செயலா் கே.மாரிமுத்து, ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை, விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ஜெ.ஜெயராமன், மாதா் சங்க ஒன்றியச் செயலா் ஆா்.உஷா, இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலா் எம்.நல்லசுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.