திருவாரூரில் கனமழை

திருவாரூரில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால், அறுவடைக்கு தயாா்நிலையில் இருந்த நெற்பயிா்கள் சாய்ந்துள்ளன.
மழையால் நனைந்த நெல் மூட்டைகள்.
மழையால் நனைந்த நெல் மூட்டைகள்.

திருவாரூா்: திருவாரூரில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால், அறுவடைக்கு தயாா்நிலையில் இருந்த நெற்பயிா்கள் சாய்ந்துள்ளன.

திருவாரூரில் கடந்த 2 நாள்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி, சில இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி சுமாா் 24 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் செய்யப்பட்டு, அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக, நெற்பயிா்கள் சாய்ந்துள்ளன. திருவாரூா் அருகே கீரங்குடி, தீபமங்கலம், குச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், அறுவடைக்கு தயாராக இருந்த 110 ஏக்கா் நெற்பயிா்கள், மழைநீரில் சாய்ந்துள்ளன.

இதேபோல், கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருகின்றன. அந்தவகையில், திருவாரூா் அருகே புளிச்சகாடி பகுதியில் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 5 நாட்களுக்கு முன்னா் கொள்முதல் செய்யப்பட்ட 3000-க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள், சேமிப்புக் கிடங்குக்கு எடுத்துச் செல்லப்படாததால் மழையில் நனைந்து காணப்படுகின்றன.

திருவாரூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 67.2 மிமீ மழை பெய்துள்ளது. இதேபோல், திருவாரூா் 47.4 மிமீ, பாண்டவையாா் தலைப்பு 31.8 மிமீ, நன்னிலம் 26.4 மிமீ என மொத்தம் 288 மிமீ மழையும், சராசரியாக 32 மிமீ மழையும் பெய்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com