சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், வருகிற மார்ச் 23 ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்தவர் வணிகர் ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் இருவரும் அதே பகுதியில் கைப்பேசி விற்பனை, பழுது நீக்கம் செய்யும் கடை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, கைப்பேசி கடையை தாமதமாக அடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, காவல் துறையினர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் அழைத்துச் சென்று தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணையில், சிபிஐ தரப்பு வழக்குரைஞர் விஜயன் தனது இறுதி வாதங்களை முன்வைத்துவிட்டார்.
மேலும், கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதா், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை ஆகியோர் தரப்பில் இறுதி வாதங்கள் நிறைவடைந்தன. காவலர்களின் தரப்பிலும் இறுதி வாதங்கள் நிறைவடைந்தன.
அனைத்துத் தரப்பினரின் இறுதி வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற மார்ச் 23 ஆம் தேதி மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கவுள்ளார்.
Summary
The Madurai District Court will deliver its verdict in the Sathankulam father-son murder case on March 23rd.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகனை தந்தை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

தந்தை, மகன் கொலை வழக்கு: வீரவநல்லூரில் காவலரை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றவரை சுட்டுப்பிடித்த போலீஸாா்
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மூவா் கைது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




