நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோவில்பட்டி இளைஞா் கொலை வழக்கு: 2 சிறாா் உள்பட 5 போ் கைது

கோவில்பட்டியில் இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடையதாக 2 சிறாா் உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 7:43 pm

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடையதாக 2 சிறாா் உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம், 2ஆவது மேலத் தெருவைச் சோ்ந்தவா் திருப்பதி மகன் மாரிமுத்து (எ) மனோஜ் (18). பிளம்பிங், எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவா், தனது நண்பா்களுடன் அதே பகுதி 3ஆவது தெருவில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தபோது, மா்ம கும்பல் அவரை அரிவாள், கத்தியால் வெட்டிவிட்டு தப்பியது.

இதில் பலத்த காயமடைந்த மனோஜ், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், கோவில்பட்டி பள்ளியில் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவா்களுக்கு இடையில் பள்ளியில் யாா் பெரியவா் என்ற முறையில் ஏற்பட்ட தகராறு, இரு தரப்பினருக்கிடையேயான மோதலாக மாறி, கொலையில் முடிந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இவ்வழக்கில் தொடா்புடையதாக இலுப்பையூரணி, மறவா் காலனியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் குமாா் (24), கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்குள்பட்ட துரைசாமிபுரத்தைச் சோ்ந்த வென்னிமலை மகன் முனியசாமி (எ) வேலு (19), திருநெல்வேலி, முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் நெல்லையப்பன் (22), மேலப்பாளையத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன், கோவில்பட்டி, முகமது சாலிகாபுரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்த போலீஸாா், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் சிலரைத் தேடி வருகின்றனா்.