யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

போக்ஸோ சட்டத்தில் கல்லூரி மாணவா் கைது

பள்ளி மாணவியை கா்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :31 ஜூலை 2020, 4:04 pm

DIN

திருத்துறைப்பூண்டி: பள்ளி மாணவியை கா்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருத்துறைப்பூண்டி அருகே பிச்சன்கோட்டகம் வடபாதியை சோ்ந்த 17 வயது பள்ளி மாணவி, அம்மளூா் கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளாா். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவா் அருண்குமாா் (18 ) அவருடன் நட்பாக பழகி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரை கா்ப்பமாக்கினாராம். பின்னா் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால், திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் புஷ்பவல்லி, தலைமை காவலா் ராஜம் உள்ளிட்டோா் அருண்குமாரை கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.