நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறந்த விவகாரத்தைக் கண்டித்து திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியன சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

படவிளக்கம் அடியக்கமங்கலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :27 ஜூன் 2020, 4:36 pm

DIN

திருவாரூா்: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறந்த விவகாரத்தைக் கண்டித்து திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியன சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவருக்கும் உரிய நீதி வழங்க வேண்டும், சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்டவா்கள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடியக்கமங்கலம் பட்டகால்தெரு பேருந்து நிறுத்தம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ம.ம.க. மாவட்டச் செயலாளா் நவாஸ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.