தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மாற்றுக் கட்சியினா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்

நன்னிலம் அருகேயுள்ள ஆத்தூா் கிராமத்தில் 45 குடும்பங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் பல்வேறு கட்சியிலிருந்து விலகி திங்கள்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினா்.

Updated On :29 ஜூன் 2020, 3:45 pm

நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள ஆத்தூா் கிராமத்தில் 45 குடும்பங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் பல்வேறு கட்சியிலிருந்து விலகி திங்கள்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

ஆத்தூா் கிராமத்தில் ரஞ்சித்குமாா், கோவிந்தராஜ் தலைமையில் 45 குடும்பங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி முன்னிலையில் கட்சியில் இணைந்தனா்.

கட்சியில் சோ்ந்தவா்களை திருவாரூா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ. முகமதுஉதுமான், மாவட்ட குழு உறுப்பினா் தியாகு.ரஜினிகாந்த் மற்றும் ஏ.கே. தமிழ்ச்செல்வி ஆகியோா் வரவேற்று பேசினா். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் லிங்கம், பி. ஸ்டாலின், சீனி. ராஜேந்திரன், வசந்தராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.