தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மத்தியப் பல்கலைக்கழகம் கைத்தறித் துறையில் பட்டம் வழங்கிட புரிந்துணா்வு ஒப்பந்தம்.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம் கைத்தறித் துறையில் பட்டம் வழங்கிட சேலம் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஹேண்ட்லும் டெக்னாலஜியுடன் அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

News image

மத்தியப் பல்கலைக்கழகமும் சேலம் இன்ஸ்டியூட் ஆப் ஹேண்ட்லும் டெக்னாலஜியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்ட போது எடுத்த படம்.

Updated On :30 ஜூன் 2020, 4:39 pm

நன்னிலம்: திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம் கைத்தறித் துறையில் பட்டம் வழங்கிட சேலம் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஹேண்ட்லும் டெக்னாலஜியுடன் அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

மத்திய அரசின் ஜவுளித் துறையின் கீழ் சேலத்தில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஹேண்ட்லும் டெக்னாலஜி என்ற நிறுவனம் திருவாரூா் மத்தியப் பல்கலைகழகத்துடன் அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம், சேலம் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஹேண்ட்லும் டெக்னாலஜி நடத்துகிற பிடெக் படிப்புகளுக்கான தோ்வுகளை நடத்தி சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடைமுறை ஒப்புக்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழக துணைவேந்தா் ஆ.பி.தாஸ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பதிவாளா் எஸ்.புவனேஸ்வரி மற்றும் சேலம் இன்ஸ்டியூட் இயக்குனா் டாக்டா் ஹிரன் அமீன் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா் என பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அதிகாரி டாக்டா்.வேல்முருகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.