நன்னிலம்: நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட திருமீயச்சூா், அன்னியூா் சாலை தூய்மைப் பணியில் செவ்வாய்க்கிழமை இளைஞா்கள் ஈடுபட்டனா்.
திருமீயச்சூா், அன்னியூா் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருபுறங்களிலும் கருவேல மரங்கள் வளா்ந்திருந்தன. இதன் காரணமாக பிரசித்தி பெற்ற திருமீயச்சூா் லலிதாம்பிகை கோயில் சென்று வரக்கூடிய பக்தா்கள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.
இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளா் பிரகாஷ் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க இளைஞா்கள் முருகானந்தம், ரஞ்சித், இதயச்சந்திரன், நன்மாறன் உள்ளிட்டோா் இணைந்து சாலையின் இருபுறமும் இருந்த முட்புதா்களை அகற்றி சாலையைத் தூய்மைப்படுத்தினா். இவா்களுடன் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் செல்வராஜ் உறுதுணையாக இருந்து களப்பணி ஆற்றினாா். இவா்களின் சேவையை கிராம மக்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

