விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மத்தியப் பல்கலைக்கழகத்தில் தொழில் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு சேர்க்கை ஆரம்பம்

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள சமுதாயக் கல்லூரியில் இளங்கலை மூன்றாண்டு தொழிற்சார்ந்த பட்டப்படிப்புகள் சேர்க்கைத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News image
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம்.
Updated On :2 நவம்பர் 2020, 8:10 am

DIN

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள சமுதாயக் கல்லூரியில் இளங்கலை மூன்றாண்டு தொழிற்சார்ந்த பட்டப்படிப்புகள் சேர்க்கைத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் நீலகுடியில் மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக்கழகத்துடன் இணைந்த சமுதாயக் கல்லூரியில் தொழில் சார்ந்த மூன்றாண்டு இளங்கலை டிஜிட்டல் இதழியல் மற்றும் மல்டிமீடியா பயன்பாடுகள் மற்றும் திரைக்கதை மற்றும் டிஜிட்டல் ஒளிப்பதிவு ஆகியப் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. இப் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கைத் தொடங்கி நடைபெற்று வருவதாக மத்தியப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் டாக்டர் பிரான்சிஸ் பி. பார்க்கலே தெரிவித்துள்ளார். 

இது சம்பந்தமாக திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ளச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,  திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிற சமுதாயக் கல்லூரியில் தொழில் சார்ந்த மூன்றாண்டு இளங்கலைப் பட்டப் படிப்புகள், டிஜிட்டல் இதழியல் மற்றும் மல்டிமீடியா பயன்பாடுகள் என்ற பாடப்பிரிவும் திரைக்கதை மற்றும் டிஜிட்டல் ஒளிப்பதிவு என்ற பாடப் பிரிவும் 2020 -21 ஆம் கல்வி ஆண்டிலிருந்து தொடங்கப்பட உள்ளது. இந்த பாடப் பிரிவுகளுக்கானச் சேர்க்கைத் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த வேலைவாய்ப்புச் சார்ந்த தொழிற்கல்வி பட்டப் படிப்புகள், உள்ளூர் பகுதி இளைஞர் சமூகத்தினுடைய நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாடப்பிரிவுகளுக்கும் தலா 20 இடங்கள் ஆக மொத்தம் 40 இடங்கள் மட்டுமே உள்ளது. குறைந்தபட்சக் கல்வி தகுதியாக பிளஸ்-2 தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டப் படிப்புகளில் மூன்றாண்டுகள் தொடர்ந்து படிக்க முடியாதவர்கள், முதல் ஆண்டு மட்டும் படித்து முடித்தால் சான்றிதழும், இரண்டாம் ஆண்டு படித்து முடித்தால் பட்டயமும், மூன்றாண்டுகள் தொடர்ந்து படித்து முடித்தால் இளங்கலைப் பட்டமும் வழங்கப்படும். 

எனவே இந்த தொழில் சார்ந்த இளங்கலைப் பட்டப் படிப்புகளை இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பயன்படுத்தி, தங்கள் எதிர்காலத்தை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். இரண்டு பட்டப்படிப்புகளிலும் மொத்தமாக உள்ள 40 இடங்கள் நிரப்பப்படும் வரை மட்டுமே சேர்க்கை நடைபெறும் என்பதை இளைஞர்கள் அறிய வேண்டும். மேலும் ஏதேனும் விவரங்கள் தேவைப்படின் மத்தியப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் டாக்டர் பிரான்சிஸ் பி. பார்க்கலே என்பவரை 7904213765 மற்றும் 9894009264 அல்லது டாக்டர் என்.பூபாலகிருஷ்ணன் 99444 31305 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரம் அறியலாம். 

சேர்க்கைக்கான கூகுள் படிவத்தை இளைஞர்கள் நிரப்புவதன் மூலம் பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.