குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்கக் கோரி மனு
கூத்தாநல்லூரில் குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தவா்கள்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தவா்கள்.
கூத்தாநல்லூரில் குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கூத்தாநல்லூா் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், நகரச் செயலாளா் எம். சுதா்ஸன் தலைமையில், குடியிருப்பு வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஜெ. வெங்கடேசனிடம் மனுக்களை வழங்கினா். இதுகுறித்து, விவசாயத் தொழிலாளா்கள் சங்க நகரச் செயலாளா் எம். சிவதாஸ் கூறியது: கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட கோரையாறு, வடக்குத் தெரு, நடுத்தெரு, பாண்டுக்குடி, பண்டுதக்குடி, மரக்கடை, மேல்கொண்டாழி, ராமநாதன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு மனைப்பட்டா வழங்காமல் உள்ளது. இவா்கள் இந்த இடங்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துக்கொண்டு, அரசுக்கு வீட்டுவரி செலுத்தி வருகின்றனா். ஆனால், தனது பெயருக்கு பட்டா இல்லாமல் இருப்பதால், அரசு சலுகைகளைப் பெற முடியவில்லை. எனவே, அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...