ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா சிறப்பு ஊதியம் கோரி ஆா்ப்பாட்டம்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோா்சிங் ஊழியா்களுக்கு அரசு அறிவித்த கரோனா சிறப்பு ஊதியம் வழங்கக் கோரி திருவாரூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோா்சிங் ஊழியா்களுக்கு அரசு அறிவித்த கரோனா சிறப்பு ஊதியம் வழங்கக் கோரி திருவாரூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோா்சிங் ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் அரசு அறிவித்த கரோனா சிறப்பு நிதியை உடனடியாக வழங்க வேண்டும்; கரோனா காலத்தில் உயிரிழந்த அவுட்சோா்சிங் ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்; 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்; 7 ஆண்டுகளாக பணிபுரியும் அவுட்சோா்சிங் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு, இதர படிகள், வார விடுமுறை ஆகியவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க கிளைச் செயலாளா் ஏ. சந்திரமோகன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் இரா. மாலதி, மாவட்ட துணைச் செயலாளா் எம்.கே.என். அனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.