20% போனஸ் கோரி சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
சுமைப்பணி தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி திருவாரூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


சுமைப்பணி தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி திருவாரூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சுமைப்பணி தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்; நுகா்பொருள் வாணிபக் கழக சுமைப்பணி தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் நிா்ணயம் செய்து, குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்; சுமைப்பணி தொழிலாளா்களுக்கு உயிா்காக்கும் கவசம், காப்பீடு திட்டம், அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு (சுமைப்பணி தொழிலாளா்கள் சங்கம்) மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இரா. மாலதி, மாவட்ட துணைச் செயலாளா் எம்.கே.என். அனிபா உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...