விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குடிபோதையில் ஆற்றில் விழுந்த இளைஞர் பலி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கோரையாற்றில் குடிபோதையில் விழுந்த இளைஞரின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :15 நவம்பர் 2020, 3:07 pm

DIN


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கோரையாற்றில் குடிபோதையில் விழுந்த இளைஞரின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்டெடுக்கப்பட்டது.

கூத்தாநல்லூர் அடுத்த புளியங்குடி, கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் சதீஸ்குமார் (21). இவர் திருப்பூரில் வேலை பார்க்கிறார். தீபாவளிக்காக ஊருக்கு வந்தவர், சித்தாம்பூரில் உள்ள அக்கா வீட்டுக்கு, வெள்ளிக்கிழமை (13 ம் தேதி) வந்துள்ளார். 

அப்போது இரவு, கோரையாற்றின் மதகுக் கட்டையில் உட்கார்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, நிலை தடுமாறியவர் ஆற்றில் விழுந்துள்ளார்.

தகவலறிந்த கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆற்றுக்குள் உடலைத் தேடியுள்ளனர். ஆனால், கிடைக்கவில்லை. இந்த நிலையில் வடகோவனூர் அருகே ஞாயிற்றுக்கிழமை உடல் ஒதுங்கியுள்ளது. 

கூத்தாநல்லூர் காவல் துறையிடம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கட்டான் கொடுத்த புகாரின் பேரில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.