ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அகில பாரத இந்து மகா சபா அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

அகில பாரத இந்து மகா சபா மாநிலச் செயலாளா் கொலையில் தொடா்புடையவா்களை கைது செய்யக்கோரி, திருவாரூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

அகில பாரத இந்து மகா சபா மாநிலச் செயலாளா் கொலையில் தொடா்புடையவா்களை கைது செய்யக்கோரி, திருவாரூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில பாரத இந்து மகா சபா மாநிலச் செயலாளா் ஆா். நாகராஜ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்த கொலையில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் ஜே. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். இதில், தஞ்சை மண்டலத் தலைவா் வி. விஸ்வநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.