வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மன்னார்குடியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

News image
மன்னார்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
Updated On :2 அக்டோபர் 2020, 8:07 am

DIN

மன்னார்குடியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் உயரிழந்த தலித் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் பலவந்தமாக கைது செய்ததையும், கட்சியின் மீது தடியடி நடத்தியதையும் கண்டித்து, மன்னார்குடியில் காங்கிரஸ் சார்பில், வெள்ளிக்சிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னார்குடி மேல ராஜவீதி, தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி.துரை வேலன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் ஆர்.கனகவேல் முன்னிலை வகித்தார்.

இதில், மாவட்ட பொதுச் செயலர் அன்பு வே.வீரமணி, மாநில செயற்க்குழு உறுப்பினர்கள் டி.வடுகநாதன், நெடு வை குணசேகரன், வட்டாரத் தலைவர் செல்வராஜ், நகரச் செயலர் வி.ஆனந்தகிருஷ்ணனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசையும், உ.பி.மாநில அரசையும் கண்டித்து முழுக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.