மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மன்னார்குடியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில், கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்த தமிழக அரசைக் கண்டித்து, இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா பங்கேற்றார்.

News image
மன்னார்குடி அடுத்த பாமணி கர்ணாவூர் ஊராட்சி அலுவலகம் அருகே தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
Updated On :2 அக்டோபர் 2020, 8:17 am

DIN

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்த தமிழக அரசைக் கண்டித்து, இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா பங்கேற்றார்.

ஆண்டுதோறும் காந்தி ஜயந்தி நாளில், ஊராட்சிதோறும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். நிகழாண்டு (அக்.2. ஆம்  தேதி) வெள்ளிக்கிழமை காந்தி ஜயந்தி நடைபெற இருந்த நிலையில், கரோனா தொற்று தடுக்கும் வகையில், கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, வியாழக்கிழமை தமிழக அரசு சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்திருக்கும் தமிழக முதல்வரின் நடவடிக்கை கண்டித்து. மன்னார்குடி அடுத்துள்ள பாமணி கர்ணாவூர் ஊராட்சி அலுவலகம் அருகே தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாவட்ட ஊராட்சி தலைவருமான ஜி.பாலு முன்னிலை வகித்தார்.

இதில், பாமணி கர்ணாவூர் ஊராட்சி தலைவர் எஸ்.சாரதி, கட்சி கிளைச் செயலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, வேளாண்  சட்டத் திருந்த மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத் திருந்தத்தை ஆதரித்துடன், கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.