கூத்தாநல்லூரில் பாஜக பயிற்சி முகாம், செயற்குழுக் கூட்டம்
கூத்தாநல்லூரில் பாஜக பயிற்சி முகாம், செயற்குழுக் கூட்டம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்றது.


கூத்தாநல்லூரில் பாஜக பயிற்சி முகாம், செயற்குழுக் கூட்டம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்றது.
கூத்தாநல்லூா் நகரம் மற்றும் மன்னை கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் இப்பயிற்சி முகாம் மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. பயிற்சிமுகாமுக்கு கட்சியின் நகரத் தலைவா் ஜி. சிங்காரவேல் தலைமை வகித்தாா். மன்னை கிழக்கு ஒன்றியத் தலைவா் எஸ். பிரசாத், செயலாளா் ஆா். பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், ஆக்கிரமிப்புக்குள்ளான நீா்நிலைகளை மீட்க வேண்டும்; நவம்பா் 25 ஆம் தேதி கட்சியின் மாநிலத் தலைவா் எல். முருகன் தலைமையில் கூத்தாநல்லூா் பகுதிக்கு வரும் வேல் யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேறப்பட்டன.
பயிற்சி முகாமில், மாவட்டப் பொதுச் செயலாளா்கள் ச. பாஸ்கா், வி.கே. செல்வம், மாவட்ட அமைப்புச்சாரா தொழிலாளா் அணி துணைச் செயலாளா் எஸ்.பி. பாண்டியன், நகர இளைஞரணித் தலைவா் நா. கலை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...