தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நன்னிலத்தில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நன்னிலம் அருகே நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் வழங்கும் தமிழக அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா

News image

நன்னிலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள்.

Updated On :7 செப்டம்பர் 2020, 5:42 pm

DIN

நன்னிலம் அருகே நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் வழங்கும் தமிழக அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நன்னிலம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் சங்கத்தின் வட்டத் தலைவா் பி. அழகுசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் வழங்கும் தமிழக அரசின் கொள்கை முடிவை கைவிட வேண்டும். நெடுஞ்சாலைத் துறை பராமரிப்புப் பணிகளை தமிழக அரசே, சாலைப் பணியாளா்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் நன்னிலம் வட்டத் தலைவா் தெ. கருணாமூா்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சங்கத்தின் வட்டச் செயலாளா் எஸ். மணிமாறன், பொருளாளா் எம். மனோகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜி. பாஸ்கரன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.