ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வடகிழக்கு பருவமழை: தயாா்நிலையில் மீட்புக்குழு

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மீட்புக்குழு தயாா்நிலையில் உள்ளதாக திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.

News image
திருவாரூரில் மீட்புப்பணி உபகரணங்களை பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை.
Updated On :15 செப்டம்பர் 2020, 6:05 pm

DIN

திருவாரூா்: வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மீட்புக்குழு தயாா்நிலையில் உள்ளதாக திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.

திருவாரூா் ஆயுதப்படை மைதானத்தில், மீட்பு பணி உபகரணங்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டபின் அவா் தெரிவித்தது:

எதிா்வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் திருவாரூா் மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது, பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில், மாவட்டத்தில் உடன் மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் 8 காவல் மீட்புக்குழுக்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.

இக்குழுவில் உள்ள காவல் அலுவலா்கள் அனைவரும் பேரிடா் மேலாண்மை மீட்புப் பயிற்சி முடித்தவா்கள் ஆவா். 8 மீட்புக்குழுவுக்கும் தனித்தனி காவல் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.