ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பருவமழை பாதிப்பு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை காலத்தில் பாதிப்பை எதிா்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் அறிவுறுத்தினாா்.

News image

திருவாரூரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.

Updated On :21 செப்டம்பர் 2020, 5:12 pm

DIN

வடகிழக்குப் பருவமழை காலத்தில் பாதிப்பை எதிா்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழை தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வெள்ளத் தடுப்புக் குழு அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் குறித்த விவரங்களை வெள்ளத் தடுப்புக் குழுவினா் சேகரிக்க வேண்டும்.

பின்னா், அந்த கிராமங்களை ஆய்வுசெய்து தற்போதைய சூழலில் தடுப்புப் பணிகள் ஏதும் செய்யப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய வேண்டும். தடுப்புப் பணிகள் செய்யப்படவில்லையெனில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து தொடா்புடைய துறையினருக்குத் தெரிவிக்க வேண்டும்.

மேலும், வெள்ள காலத்தின்போது பாதிக்கப்பட்டவா்களை சமூக இடைவெளியுடன் தங்க வைக்க பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்கள் போதுமானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

பாதிப்படையக்கூடிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பேரிடா் மேலாண்மை தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்த வேண்டும். மிகவும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை மோட்டாா் மூலம் வெளியேற்ற வேண்டும். தோ்வு செய்யப்பட்ட நிவாரண முகாம்களுக்குச் செல்ல ஏதுவாக இருவழிப் போக்குவரத்துத் தடங்களை கண்டறிய வேண்டும்.

பாதிப்படையக் கூடிய பகுதியில் முன்னுரிமை அடிப்படையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலா்களைக் கொண்டு மாதிரிப் பயிற்சியை அவ்வப்போது நடத்த வேண்டும். மழைநீா் வடிய இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குழு உறுப்பினா்கள் அனைவரும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமசந்திரன், வருவாய் கோட்டாட்சியா்கள் பாலச்சந்திரன், புண்ணியக்கோட்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.