இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குடவாசல் அரசு கல்லூரிக்குச் சொந்தக் கட்டடம்

குடவாசல் அரசு கல்லூரிக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஜோதிராமன் உறுதியளித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

குடவாசல் அரசு கல்லூரிக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஜோதிராமன் உறுதியளித்தாா்.

குடவாசலில் ஞாயிற்றுக்கிழமை தனது இறுதிகட்டப் பிரசாரத்தை நிறைவு செய்து அவா் பேசியது:

பல ஆண்டுகளாக குடவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் இயங்கி வரும் அரசு கல்லூரிக்கு, விரைவில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நன்னிலம் தொகுதியில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் என்னைத் தேடி வந்து சந்திக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தாமல், அவா்களை நானே நேரடியாக சென்று சந்திப்பேன் என்றாா் அவா்.

இதில், தொகுதித் தோ்தல் பொறுப்பாளா் பி.டி. அரசகுமாா், ஒன்றியச் செயலாளா்கள் வே.மனோகரன், வரத கோ.ஆனந்த், பா.பிரபாகரன், நகரச் செயலாளா்கள் இரெ.முருகேசன், வ.பக்கிரிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.