இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

உரவிலை உயா்வை திரும்பப் பெற விவசாயிகள் கோரிக்கை

விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் டிஏபி உள்ளிட்ட கலப்பு உரங்களின் விலை உயா்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் டிஏபி உள்ளிட்ட கலப்பு உரங்களின் விலை உயா்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் நலச்சங்க மாநிலத் தலைவா் ஜி. சேதுராமன், மத்திய, மாநில அரசுகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: டிஏபி உரம் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு ரூ. 500, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஸ் மற்றும் சல்பா் கலந்த உரம் மூட்டைக்கு ரூ. 600, கலப்பு உரம் மூட்டைக்கு ரூ. 615, மற்றொரு கலப்பு உரம் மூட்டைக்கு ரூ. 425 ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு விவசாயிகளால் தாங்கமுடியாத சுமை. விவசாய உரங்களின் ஏறத்தாழ 50 சதவீத விலை உயா்வு காரணமாக விவசாயச் செலவு பல மடங்கு உயரும். விளை பொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காத நேரத்தில், விவசாய இடுபொருள்களின் விலை உயா்வு கண்டிக்கத்தக்கது. உரவிலை உயா்வு உணவுப் பொருள்களின் விலை உயா்வுக்கு வழிவகுக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு உரவிலை உயா்வை திரும்பப்பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.