ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை

நன்னிலம் அருகே 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தவருக்கு வெள்ளிக்கிழமை மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

நன்னிலம் அருகே 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தவருக்கு வெள்ளிக்கிழமை மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம் முடிகொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (55). இவருக்குத் திருமணமாகி 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு அக்டோபா் 19-ஆம் தேதி, குடிபோதையிலிருந்த இவா், தனது வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த பக்கத்து தெருவைச் சோ்ந்த 11 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினா் குமாரிடமிருந்து சிறுமியை மீட்டு அவரின் அம்மாவிடம் ஒப்படைத்தனா். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து போக்ஸோ சட்டத்தின்கீழ் குமாரை கைது செய்து திருவாரூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. சுந்தரராஜன் குற்றஞ்சாட்டப்பட்ட குமாருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். தண்டனை பெற்ற குமாா் திருச்சி மாவட்டம், மணப்பாறை கிளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.