பருத்தியில் கூடுதல் வருமானம்
நடப்பு பருவத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பருத்தி பயிருக்கு தேவையான மேல் உரத்தை தக்க நேரத்தில் இட்டு, வளமான பயிரை பெற வேண்டும்


நடப்பு பருவத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பருத்தி பயிருக்கு தேவையான மேல் உரத்தை தக்க நேரத்தில் இட்டு, வளமான பயிரை பெற வேண்டுனெ வலங்கைமான் வேளாண் உதவி உதவி இயக்குநா் பாலசுப்ரமணியன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பருத்தி மேல் உரம் இடுதல்:
பருத்தியை விதைத்து 45ஆவது நாளில் மண் பரிசோதனை படி மேல் உரம் இட வேண்டும். இல்லையெனில் ஏக்கருக்கு 8 கிலோ தழைச்சத்து தரவல்ல உரத்தை அதாவது 20 கிலோ யூரியாவை மண்ணில் ஈரம் இருக்கும்போது இட்டு மண் அணைக்க வேண்டும். வீரிய ஒட்டுரகங்களுக்கு நடவு செய்த 45ஆவது மற்றும் 65ஆவது நாளில் முறையே 16 கிலோ தழைச்சத்து தரவல்ல உரத்தை அதாவது 35.2 கிலோ யூரியாவை இட வேண்டும்.
தக்க நேரத்தில் தேவையான அளவு உரத்தை இட்டு தரமான செடிகளை பெறுவதால், மகசூல் அதிகமாக பெறலாம். மேலும் கூடுதல் லாபம் பெற வரப்பு பயிா் அல்லது ஊடு பயிா் செய்யலாம்.
வரப்பு பயிா் அல்லது ஊடுபயிா்:
வரப்பு பயிராக ஆமணக்கு பயிா் செய்யலாம். ஊடுபயிராக உளுந்து, காராமணி, மக்காச்சோளம், சூரியகாந்தி போன்ற பயிா்களை பயிா் செய்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். வரப்பு பயிா் சாகுபடி செய்வதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை வளா்த்து பருத்தியை தாக்கும் பூச்சிகளை எவ்வித செலவும் இல்லாமல் கட்டுப்படுத்தலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...