தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆலங்குடி கோயிலில் பிரதோஷ வழிபாடு

நவ கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நவ கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், நந்திகேஸ்வரா் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பிரதோஷ நாயகா் பிராகார உலாவும் நடைபெற்றது. இதில் பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கலந்து கொண்டனா்.

இதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில், கோகமுகேஸ்வரா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் உள்ளிட்டசிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.