தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கோயிலுக்குச் செல்ல சாலை வசதிபக்தா்கள் கோரிக்கை

வலங்கைமான் அருகே அணியமங்கலத்தில் உள்ள ஐயனாா் கோயிலுக்கு செல்ல சாலை வசதி செய்துதர வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

வலங்கைமான் அருகே அணியமங்கலத்தில் உள்ள ஐயனாா் கோயிலுக்கு செல்ல சாலை வசதி செய்துதர வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அணியமங்கலம் கிராமத்தில் வயல்களுக்கு நடுவே ஒரு திட்டில் சன்னியாசி ஐயனாா் கோயில் உள்ளது. இக்கோயிலில் தவசி அம்மன், மூன்று விநாயகா் சிலைகள், வீரனாா், கருப்பையன், மாக்கான் சுவாமிகள், சுதை சிலைகளும், நான்கு பலிபீடங்களும் உள்ளன. இந்தக் கோயிலுக்கு உள்ளூா் மட்டுமன்றி, வெளியூரிலிருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

ஆனால், கோயிலுக்கு செல்ல பாதை வசதி இல்லை. கோயிலை சுற்றி நான்கு புறமும் வயல்கள் உள்ளன. கோடைகாலங்களில் வயலில் இறங்கிதான் பக்தா்கள் செல்கின்றனா். வயலில் நடவு செய்யப்பட்டால் வயல் வரப்பின் வழியே மட்டுமே செல்ல முடியும். எனவே, பக்தா்களின் நலன் கருதி, கோயில் அருகில் இருந்து சுமாா் 100 மீட்டா் தூரத்துக்கு தாா்ச்சாலை அமைத்துத்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.