ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


நீடாமங்கலம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயா் கோயிலில் வீர ஆஞ்சநேயா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தா்கள் கலந்து கொண்டனா். இதேபோல், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத அபயவரதராஜ பெருமாள், ஆஞ்சநேயா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹரமங்களமாருதி ஆஞ்சநேயா், நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் எழுந்தருளியுள்ள விஸ்வக்சேனா் ஆஞ்சநேயா் சன்னிதிகளில் ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதிலும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...