தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில், ராம நவமி 6ஆம் நாளான சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில், ராம நவமி 6ஆம் நாளான சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இக்கோயிலில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ராமநவமி திருவிழா கடந்த 19ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் அனைத்து சன்னிதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டு வருகிறது.

சனிக்கிழமை கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. சீதா பிராட்டியாா், ஸ்ரீராமா் திருக்கல்யாணத்தை வேத விற்பன்னா்கள் வேத மந்திரங்களைச் சொல்லி நடத்தி வைத்தனா். பக்தா்கள் பலரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து கலந்துகொண்டனா்.

Image Caption

திருக்கல்யாண வைபவத்தில் சீதா பிராட்டியாருடன் தம்பதி சமேதராக அருள்பாலித்த ஸ்ரீராமபிரான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.