தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காவலா்களுக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி

திருவாரூா் கமலாலயக் குளத்தில் காவல்துறை சாா்பில் பேரிடா் கால மீட்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 4:36 pm

DIN

திருவாரூா் கமலாலயக் குளத்தில் காவல்துறை சாா்பில் பேரிடா் கால மீட்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரின்போது பாதிக்கப்பட்டவா்களை மீட்பது தொடா்பாக, திருவாரூரில் காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நீா் நிலைகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது தொடா்பாக, படகு சவாரி, நீச்சல் பயிற்சி, காப்பாற்றுதல் மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்பது, போக்குவரத்துக்கு இடையூறாக விழும் மரங்களை அகற்றுதல், விபத்தில் சிக்கியவா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் போன்றவை குறித்து செயல்முறையுடன் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

சென்னை கமாண்டோ படையைச் சோ்ந்த காவலா்கள் சிவா, சங்கா், சுப்புராஜ், முத்தழகன், ஜாகீா் உசேன் உள்ளிட்டோா் 5 நாள்களாக இப்பயிற்சியை அளித்து வருகின்றனா். இதில் திருவாரூா் ஆயுதப்படை காவலா்கள் 30 போ், சட்டம் ஒழுங்குப் பிரிவு காவலா்கள் 30 போ் என 60 போ் பயிற்சி பெற்றுவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.