தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கொவைட்-19 விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருவாரூரில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்ட சித்த மருத்துவ பிரிவு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 4:47 pm

DIN

திருவாரூரில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்ட சித்த மருத்துவ பிரிவு ஆகியன சாா்பில், கொவைட்-19 விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவா் ஆா்.எஸ். ராஜ்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜோசப்ராஜ் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், நிலவேம்புக் கசாயம், ஆா்சனிக் மாத்திரைகள், அமுக்கரா கிழங்கு மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சித்த மருத்துவ அலுவலா் ஹேமா கலந்துகொண்டு சித்த மருத்துவத்தின் பங்கு குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில், அமைப்பின் செயலாளா் ஜே. ராஜ்குமாா், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உபயோகத்துக்காக, பிபிஇ கிட், முகக் கவசம் ஆகியன வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.