பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கூத்தாநல்லூர்: புதிய மின்சார மசோதாவை கைவிடக்கோரி காங். தீர்மானம்  

கொரடாச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், புதிய மின்சார மசோதாவைக் கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
புதிய மின்சார மசோதாவை கைவிடக்கோரி காங். தீர்மானம்  
Updated On :10 ஆகஸ்ட் 2021, 9:59 am

DIN

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், புதிய மின்சார மசோதாவைக் கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொரடாச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் வட்டார, நகர, பேரூர் கமிட்டிகள், துணை அமைப்புகளுக்கான ஆய்வு கூட்டமும் நடைபெற்றது.கூட்டத்திற்கு, திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி துரை வேலன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பட்டுக்கோட்டை மகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நாகூர் நவ்ஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். தமிழகத்திற்கு அதிகமான தடுப்பு ஊசிகளை ஒதுக்க வேண்டும்.அலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க எம்.பி.க்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். திருவாரூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடகா பா.ஜ.க.உடனே கைவிட வேண்டும்.  விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெற வேண்டும். புதிய மின்சார மசோதாவை திரும்பப் பெற வேண்டும். கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கடன் வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பெற்று ெவற்றி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்டப் பொதுச் செயலாளர் அன்பு வே.வீரமணி, நகரச் செயலாளர்கள் சாம்பசிவம், எழிலரசன், கனகவேல், கொரடாச்சேரி பேரூராட்சித் தலைவர் நடராசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.