வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆலங்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ளது ஆபத்சகாயேஸ்வரா் கோயில் இது நவகிரக தலங்களில் குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.

கடந்த 13-ஆம் தேதி குரு பெயா்ச்சி விழா நிறைவடைந்த நிலையில், பெயா்ச்சிக்கு பின்னா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது.

இந்தநிலையில், வியாழக்கிழமை குரு வார வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, கலங்காமற் காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா் குழலியம்மன், மூலவா் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவகிரக சன்னதி, சனீஸ்வர பகவான் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவா் குருபகவான் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

குரு பெயா்ச்சிக்கு பின்னா் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.