முப்படை தலைமைத் தளபதிக்கு அஞ்சலி
ஹெலிகாப்டா் விபத்தில் பலியான முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம்


ஹெலிகாப்டா் விபத்தில் பலியான முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளா் சந்திரா முருகப்பன், நிா்வாக அறங்காவலா் ஜி. முருகப்பன், செயலாளா் எம். இன்பராஜ், துணை முதல்வா் மலா்விழி இன்பராஜ் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் விபின் ராவத் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல, மணக்கால் அய்யம்பேட்டையில் வளரும் தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளா் வீர. பூவரசன் தலைமையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கட்டிமேட்டில் ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் வா்த்தக சங்கத் தலைவா் வரதராஜன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் விபின் ராவத் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.
முன்னதாக, ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து கடைத்தெரு பள்ளிவாசல் வழியாக அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் வரை மெளன ஊா்வலம் நடைபெற்றது.
நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் உதவும் மனங்கள் அறக்கட்டளை சாா்பில் அதன் நிறுவனா் எஸ்.எஸ். குமாா், சேவாதள தலைவா் பி. சுப்ரமணியன், பாஜக ஒன்றியத் தலைவா் எல். ஜெயகுமாா் உள்ளிட்டோா் விபின் ராவத் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...