பெரியபாளையத்தில் கிறிஸ்தவ தேவாலய பங்குத்தந்தையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
பெரியபாளையத்தில் கிறிஸ்தவ தேவாலய பங்குத்தந்தையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

பெரியபாளையம்: தேவாலய பங்குத்தந்தையைக் கண்டித்து கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

பெரியபாளையத்தில் கிறிஸ்தவ தேவாலய பங்குத்தந்தையை கண்டித்து கிறிஸ்தவ மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

பெரியபாளையத்தில் கிறிஸ்தவ தேவாலய பங்குத்தந்தையை கண்டித்து கிறிஸ்தவ மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் பெரியநாயகி மாதா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று கிறிஸ்தவ மக்கள் இன்று பங்குத்தந்தையின் சர்வாதிகார போக்கைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவாலயத்தில் வழிபாடு செய்ய வரும் பெண்களிடம் பாலியல் ரீதியில் பேசி பங்குத்தந்தை தொந்தரவு அளிப்பதாகவும், சாதிய ரீதியில் பிளவுப்படுத்தவும் முயற்ச்சிப்பதாகவும் புகார் தெரிவித்தனர். 
வார விடுமுறை நாட்களில் தங்களை வழிபாடு நடத்த விடாமல் பங்குத்தந்தை தடுப்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com