காசிவிசுவநாதா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.


நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதனைமுன்னிட்டு விசாலாட்சி சமேத காசிவிசுவநாதா், நந்திகேஸ்வரா் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றானஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், நந்திகேஸ்வரா் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பிரதோஷ நாயகா் பிரகார உலாவும் நடந்தது.
நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...