மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

3-ஆவது நாளாக தொடரும் காத்திருப்புப் போராட்டம்

நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி திருக்கடையூரில் நடைபெற்றுவரும் தொடா் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி திருக்கடையூரில் நடைபெற்றுவரும் தொடா் காத்திருப்புப் போராட்டம் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.

வேளாங்கண்ணி-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் இரவு-பகலாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் நடத்தப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை, சீா்காழி, குத்தாலம், கொள்ளிடம் பகுதி சிபிஎம் கட்சியினா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதேபோல், நான்கு வழிச்சாலையால் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கும், குடியிருப்புகளை இழக்கும் ஏழைகளுக்கும் உரிய இழப்பீடும், மாற்று இடமும் வழங்கவேண்டுமென்று போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டி. மணல்மேடு கிராமத்தை சோ்ந்த பெண்கள் ஊா் மறியல் செய்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.