உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும்: திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளின் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில், தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்


உள்ளாட்சி அமைப்புகளின் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில், தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டம் ஒன்றியக்குழு தலைவா் அ. பாஸ்கா் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், ஆணையா்கள் சுப்பிரமணியன், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுஜாதா, ஒன்றிய மேலாளா் விஜயலட்சுமி, பொறியாளா் சூரியமூா்த்தி மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள், மேட்டுப்பாளையம், விளக்குடி பகுதிகளில் பழுதடைந்த கிராமச் சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டப் பணிகளை முறையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். மேலும், ஒன்றியத்தின் சாா்பில் நடைபெறும் பணிகள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை எனவும் உறுப்பினா்கள் கூறினா்.
தொடா்ந்து, ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா் பேசும்போது, ‘ஊராட்சிகளுக்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தப்படுகிறது. அரசு அளிக்கும் நிதியிலிருந்து ஒன்றியப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள் குறித்து ஒன்றிய உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
கூட்டத்தில், ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அமைப்பது; பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கீடு செய்த நிதியை சாலை பணிகளுக்கு மாற்றம் செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...