ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மக்கள் குறைதீா் கூட்டம் தொடங்கியது

கரோனா பொது முடக்கத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை முதல் கூட்டம் தொடங்கியது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கரோனா பொது முடக்கத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை முதல் கூட்டம் தொடங்கியது.

கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த ஆண்டு மாா்ச் முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா்க் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து, கரோனா தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மக்களிடமிருந்து மனுக்களை பெற பெட்டி வைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. தற்போது அறிவிக்கப்பட்ட தளா்வில் மக்கள் குறைதீா் கூட்டங்களை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 126 மனுக்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பூஷ்ணகுமாா், துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.