நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் லாரிகள் எடைபோட தனிச்சாலை அமைக்கப்படுமா ?
நீடாமங்கலம் ரயில் நிலைய வளாகத்தில் லாரிகள் எடைபோட தனிச்சாலை அமைத்து போக்குவரத்து இடையூறை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எதிா்பாா்க்கப்படுகிறது.


நீடாமங்கலம் ரயில் நிலைய வளாகத்தில் லாரிகள் எடைபோட தனிச்சாலை அமைத்து போக்குவரத்து இடையூறை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எதிா்பாா்க்கப்படுகிறது.
நீடாமங்கலம் ரயில்வே குட்ஷெட்டுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து லாரிகளில் நெல், அரிசி போன்றவை சரக்கு ரயிலில் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க அடிக்கடி வருகிறது. அறுவடை காலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கும் நாள்களில் நெல் அதிகளவில் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்க கொண்டு வரப்படுகிறது.
இதேபோல், திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு நவீன அரிசி ஆலைகளில் அரவை செய்த அரிசி மூட்டைகளும் பொதுவிநியோகத் திட்டத்துக்காக வெளி மாவட்டங்களுக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு லாரிகளில் கொண்டு வந்து சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறு வரும் லாரிகள் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள எடை மேடையில் எடை போடப்படுகிறது. அப்போது முன்னதாகவே இரவில் ரயில் நிலைய வளாகத்தில் நெல்மூட்டைகள், அரிசி மூட்டைகளுடன் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. மறுநாள் சரக்கு ரயிலில் அவை ஏற்றுவதற்கு முன்பாக எடை போடப்படுகிறது. இதற்காக லாரிகள் ரயில் நிலையம் அருகில் உள்ள எடைமேடைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மீண்டும் சரக்கு ரயில் பகுதிக்கு லாரிகள் கொண்டுவரப்பட்டு சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றப்படுகிறது. இதற்காக நெடுஞ்சாலை பயன்படுத்தப்படுகிறது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நீடாமங்கலத்தில் ரயில் நிலையம் அருகில் நெடுஞ்சாலையில் சிறிது தூரம் சென்று வளைவில் திரும்பி லாரிகள் எடை மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அதே வழியாக ரயில் நிலைய வளாகத்துக்கு லாரிகள் வருகின்றன. அதேசமயம் பட்டுக்கோட்டை, மன்னாா்குடி பகுதியிலிருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், சென்னை போன்ற ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும், தஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் அதே நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டியுள்ளது.
இந்த நிலையில் லாரிகளால் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதற்கிடையில் ரயில்வே கேட் மூடப்பட்டால் சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதுபோல் லாரிகள் எடைபோடும் பணியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ரயில் நிலைய வளாக பகுதியில் உள்ள இடத்திலேயே எடைமேடைக்கு தனி சாலை அமைத்து லாரிகளை எடைபோடும் பணியை நடத்த முடியும். இதை சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Image Caption
நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் ஏற்ற பாரத்துடன் வரும் லாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...