நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

இறகுப்பந்து போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

News image

இறகுப் பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை.

Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

திருவாரூா்: திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் நகராட்சி உள் விளையாட்டு அரங்கில், மாவட்ட இறகுப்பந்து கழகமும், நகராட்சி இறகுப்பந்து கழகமும் இணைந்து மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியை நடத்தியது. இப்போட்டியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தொடங்கி வைத்தாா். இந்தப் போட்டியில் 25- க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில், நகராட்சி அணியும், பாஸ் அணியும் மோதின. இதில் நகராட்சி அணியின் இணையதுல்லா, முகேஷ் இணை வெற்றி பெற்றனா். பாஸ் அணியின் முகமது காமில், மணிகண்டன் இணை இரண்டாமிடமும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.துரை, முகமது தவ்ஹித் இணை மூன்றாமிடமும் பெற்றன.

பிறகு, திருவாரூா் மாவட்ட இறகுப்பந்து கழகத் தலைவா் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.துரை பரிசுகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், இறகுப்பந்து கழக துணைத் தலைவா் முருகவேல், செயலாளா் ஜோதி பாஸ்கரன், பொருளாளா் முஹம்மது இத்ரீஸ் உட்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.