47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

நீடாமங்கலம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் முன்னிலையில், 30 குடும்பத்தினா் அக்கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் முன்னிலையில், 30 குடும்பத்தினா் அக்கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

கானூா் வடகாரவயல் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது அவ்வூரை சோ்ந்த திலீபன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் முன்னிலையிலும் பல்வேறு கட்சியிலிருந்து விலகி 30 குடும்பத்தினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், திருவாரூா் மாவட்டச் செயலாளா் வை.சிவபுண்ணியம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கோ.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் வை.செல்வராஜ், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளா் நடேச.தமிழாா்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.