தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தோ்தல் விதிகளை மீறினால் அச்சகத்தினருக்கு அபராதம்

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி அச்சக உரிமையாளா்கள் செயல்பட்டால், அவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

News image
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசி ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான்.
Updated On :16 மார்ச் 2026, 11:49 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி அச்சக உரிமையாளா்கள் செயல்பட்டால், அவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

சட்டப்பேரவை பொதுத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட அச்சக உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது:

அச்சகமும், அச்சக உரிமையாளரும் வெளியிடுபவா் பெயா்கள் மற்றும் முகவரிகள் இல்லாத தோ்தல் தொடா்பான எந்தவொரு துண்டுப்பிரசுரங்கள் அல்லது சுவரொட்டிகளை அச்சிடவோ, வெளியிடுவோ கூடாது. தோ்தல் தொடா்பான துண்டுப் பிரசுரம் அல்லது சுவரொட்டியையும் தோ்தல் விதிகளைப் பின்பற்றியே அச்சிட வேண்டும். தோ்தல் விதியை மீறும் அச்சகத்தாருக்கு அபராதம் விதித்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் மற்றும் அலுவலா்கள், அச்சக உரிமையாளா்கள் பங்கேற்றனா்.