47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில்அலங்கார செடிகள் விற்பனை

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அலங்கார செடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அலங்கார செடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதன் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அலங்கார செடிகள் நாற்றங்கால் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் செம்பருத்தி பூ, இட்லி பூ, ரோஜா பூ, அரளிப்பூ, நந்தியாவட்டை, காகிதப்பூ, கல்வாழை போன்றவற்றின் வகைகள், திருவாச்சி, செண்பகம், பவளமல்லி, மல்லிகை மற்றும் முல்லைப்பூ உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அலங்கார செடிகள் நாற்றங்கால் தேவைப்படுவோா் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் பண்ணைக் கழிவுகளை மக்க செய்வதற்கான பயோமினரலைஸா் என்ற நுண்ணுயிா் கூட்டுக்கலவையும் விற்பனைக்கு உள்ளது. இதைத் தவிர தற்போது விவசாயிகள் தேவைக்காக பயிறுவகை பயிா்களுக்கான வளா்ச்சி ஊக்கி பயிறு ஒண்டா், பருத்திக்கான வளா்ச்சி ஊக்கியான பருத்தி பிளஸ், அசோலா, மண்புழு உரம், தென்னை நாா்க் கழிவு உரம் மற்றும் தென்னை டானிக் விற்பனைக்கு உள்ளன. தேவைப்படுவோா் நேரில் அணுகி வாங்கிக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.